எஸ்பிஐ ல் வேலை வாய்ப்பு !! மாதம் ரூ . 69000 சம்பளம்....
இந்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் பயனடையும் விதமாக, காலியாக உள்ள 150 வர்த்தக நிதி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜூன் 7 ஆம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்பம் ஜூன் 27 ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் sbi.co.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக 150 காலிப்பணியிடங்களில் 61 பொதுப் பிரிவினருக்கும், 25 எஸ்.சி பிரிவினருக்கும், 11 எஸ்.சி பிரிவினருக்கும், 38 ஒபிசி பிரிவினருக்கும் 15 ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான பணியிடங்கள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி தகுதி :
மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் IIBF-ல் அந்நிய செலாவணியில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதுதவிர, ஷெட்யூல்டு வங்கியில் வர்த்தக நிதித்துறையில் நிர்வாக அல்லது மேற்பார்வையாளராக இரண்டு வருட அனுபவமும் தேவை.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். அதற்கு தனி மதிப்பெண்ணும் உண்டு.