விமானத்தின் மைலேஜ் எவ்வளவு என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக விமானங்களில் எந்த வகையான எரிபொருட்களை பயன்படுத்துவார்கள் என்றுஉங்களுக்கு தெரியுமா?  விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு ஏவியேஷன் ஃபியூயல் (aviation fuel) என்று பெயர். ஏவியேஷன் எரிபொருள் அல்லது ஜெட் எரிபொருள் என்பது பெட்ரோல் மற்றும் செயற்கை எரிபொருளின் கலவையாகும்.


மேலும் விமானத்தில் உள்ள இன்ஜினின் தேவைகளை பொறுத்து பல்வேறு மாறுபாடுகளில் கிடைக்கிறது. ஏவியேஷன் கேசோலின் (Aviation Gasoline - AVGAS) மற்றும் ஜெட் ஃப்யூவல் ஆகியவை முதன்மை விமான எரிபொருள் வகைகளாக செயல்படுகின்றன. இந்த இரண்டும் வெவ்வேறு தேவைகள் மற்றும் விமான வகைகளை பூர்த்தி செய்கின்றன.

AVGAS (ஏவியேஷன் கேசோலின்):**பொதுவாக தனியார் பைலட்டுகள், ஃபிளையிங் கிளப்புகள் மற்றும் பயிற்சி ஜெட்டுகளை இயக்கும் சிறிய வகை இன்ஜின் கொண்ட விமானங்களில் AVGAS பயன்படுத்தப்படுகிறது. AVGAS இரண்டு முதன்மை வகைகளாக பிரிக்கப்படுகின்றது.


AVGAS 100: அதிக அளவு டெட்ரா எத்தில் லெட் கொண்ட இது பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய எரிபொருள் வகை.

AVGAS 100LL: குறைந்த அளவு டெட்ரா எத்தில் லெட் கொண்ட இந்த வகையான எரிபொருள் வகை நீல நிறத்தில் இருக்கும். இதில் “LL” என்பது “லோ லெட்”, அதாவது குறைந்த அளவு காரீயம் என்பதை குறிக்கிறது.

ஜெட் இன்ஜின்கள் டர்போ ப்ரோப்ஸ் மற்றும் டெர்பைன் இன்ஜின்கள் கொண்ட விமானங்களில் இந்த ஜெட் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஜெட் எரிபொருளுக்கு நிறம் எதுவும் கிடையாது. இது பெட்ரோலியம் டிஸ்டிலேட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எரியக்கூடிய ஒரு திரவம். இது முதன்மையாக ஜெட் இன்ஜின்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஜெட் எரிபொருள் என்பது மண்ணெண்ணெய் அடிப்படையிலானது. இது JET A-1 என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிபொருள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது

ஜெட் A: பெரும்பான்மையாக யுனைடெட் ஸ்டேட்ஸில் பயன்படுத்தப்படும் இந்த எரிபொருள் நிலையான டிசிபேட்டர் அடிட்டிவ்கள் இல்லாதது மற்றும் -40°C என்ற உறையும் நிலையைக் கொண்டுள்ளது.

ஜெட் A1: உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இந்த எரிபொருள் நிலையான டிசிபேட்டர் அடிட்டிவ்கள் கொண்டுள்ளது மற்றும் -47°C, என்ற குறைவான உறையும் நிலையை கொண்டுள்ளதால் இது சர்வதேச விமானங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.


விமான எரிபொருள் (ATF) விலையானது இந்தியாவில் உள்ள வெவ்வேறு மெட்ரோ நகரங்களில் வெவ்வேறாக இருக்கும். ஜூன் 1, 2024 இன் படி விமான எரிபொருள்களின் விலைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

மெட்ரோ நகரங்களில் உள்ளூர் விமானங்களுக்கான ATF விலைகள் (ரூபாய்):

1) டெல்லி: Rs 94,969.01

2) கொல்கத்தா: Rs 1,03,715.00

3) மும்பை: Rs 88,834.27

4) சென்னை: Rs 98,557.14

மெட்ரோ நகரங்களில் சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் உள்ளூர் விமானங்களுக்கான ATF விலைகள் (டாலர்கள்/Kl):

டெல்லி: $870.73

கொல்கத்தா: $909.66

மும்பை: $869.94

சென்னை: $866.58

விமான எரிபொருள் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் 

விமானங்களில் எரிபொருள்களின் பயன்பாடு என்பது எரிபொருளின் வகை, பயணித்த தூரம் மற்றும் விமானத்தின் அளவைப் பொறுத்து வேறுபடும். உதாரணமாக,

568 இருக்கைகள் கொண்ட ஒரு போயிங் 747, தோராயமாக ஒரு கிலோ மீட்டருக்கு 12 லிட்டர் எரிபொருளை பயன்படுத்துகிறது.

192 பயணிகள் கொண்ட ஒரு ஏர்பஸ் A321நியோ, ஒரு கிலோ மீட்டருக்கு 4.18 லிட்டர் எரிபொருளை பயன்படுத்துகிறது.


பிற எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில் ஜெட் எரிபொருள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜெட் எரிபொருள் குறிப்பாக மண்ணெண்ணெய் பல்வேறு காரணங்களுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

பிற எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில் மண்ணெண்ணெய் குறைவான விலையில் கிடைப்பதால் மற்ற எரிபொருள்களுடன் ஒப்பிடும் பொழுது இது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.

அதிக எரிநிலை கொண்டதால் பயணத்தின் பொழுது இது அதிக வெளியீடு திறனை உறுதி செய்கிறது.

குறைவான பிசுபிசுப்பு தன்மை:

இதன் காரணமாக குறைவான உறையும் நிலை கிடைப்பதால் மிகக்குறைந்த வெப்பநிலை கொண்ட இடங்களில் இது பாதுகாப்பு அளிக்கிறது.

குறைவான உறையும் நிலை

குளிர்ந்த கால நிலையில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஜெட் எரிபொருளில் குறைவான உறையும் நிலை உள்ளது.