தேனி மாவட்ட இளைஞர்களுக்கான வேலை அறிவிப்பு !!
தமிழ் நாட்டில் கால்நடை ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய சேவையாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் தேனி கா.விலக்கு மருத்துவமனையில் நாளை (09.06.24) நடைபெற உள்ளது.

இந்த அறிவிப்பான் தமிழக அரசின் சார்பில் 1962 என்ற கட்டணம் இல்லாத கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை இ எம் ஆர் ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறது . இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது .
குறிப்பாக தமிழக அரசு நோய்வாய் பட்ட விலங்குகளுக்கான மருத்துவ சேவையை அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று வழங்குவதற்கு விலங்குகளுக்கு என பிரத்தியோக ஆம்புலன்ஸ் சேவையை EMRI Green Health Services உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இந்த சேவையை `1962` என்ற எண்ணின் மூலம் விரைவில் தமிழகமெங்கும் விரிவுபடுத்த உள்ளார்கள். இதற்கு அதில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம்.

மருத்துவ சேவையாளர் பணிக்கு உண்டான தகுதிகள் என்னென்ன இருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் எந்த ஒரு பயிற்சி வகுப்பையும் நிறைவு செய்த ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக 15,725 ரூபாய் வழங்கப்பட உள்ளது .
ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் :-
குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்களாக இருக்க வேண்டும். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும் . இலகு ரக ஓட்டுநர் உரிமம் பேஜ் உரிமம் வைத்திருப்பதுடன் , வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும் . இவர்களுக்கு ஊதியமாக 15, 820 ரூபாய் வழங்கப்பட உள்ளது. லைசன்ஸ் எடுத்து 3 வருடம் நிறைவு பெற்று இருக்க வேண்டும். ஒரு வருடம் Batch எடுத்து நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
முகாம் நடைபெறும் இடம் மற்றும் தேதி பற்றிய முழு விவரங்களை பெற்றுக் கொள்ள 044- 28888060, 91500 84170, 98403 65462 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத்திற்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் விருப்பம் உள்ள நபர்கள் தங்கள் மாவட்ட தலைநகரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தை அணுகலாம். தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நாளை 09.06.2024
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது . நேர்முக தேர்வுகு வருபவர்கள் தங்கள் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் ஓட்டுனர் உரிமம் அவசியம் கொண்டுவர வேண்டும்.