பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 தமிழக முதல்வர் அறிவிப்பு !!!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் திறனாய்வு தேர்வுக்கு நடத்தப்பட்டு, 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாதம் 1000 வீதம் ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல மாநில அரசு உயர் கல்வியை ஊக்குவிக்க பன்னிரண்டாம் வகுப்பு முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ஆயிரம் என ஆண்டுகளுக்கு பத்தாயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டு முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி இந்த கல்வி ஆண்டில் மாநில பாட திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பு சேர் உள்ள மாணவர்கள் இந்த முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான திறனாய்வு தேர்வு ஜூலை 21 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் ஜூன் 11 முதல் 26 வரை ஆன்லைனில் https://www.dge.tn.gov.in என்ற இனையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு கட்டணமாக ரூபாய் 50 செலுத்தி அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இத்தேர்வில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ஆயிரம் என பத்து மாதங்களுக்கு 10,000 என்ற கணக்கில் அவர்கள் இளங்கலை படிப்பை முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.