நீட் தேர்வின் முடிவு !!! 1,600 மாணவர்களின் குறைகளை ஆய்வு செய்ய அறிவிப்பு !!!

பொதுவாக நீட் தேர்வு என்றாலே மாணவர்களுக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அதின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வின் முடிவுகள் வெளியான பின்னர்,மறுதேர்வு மற்றும் மதிப்பெண் இழப்பீடு கோரிய 1,600 மாணவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


பொதுவாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2024 இல் பங்கேற்ற 1,600 மாணவர்களின் குறைகளை உயர் அதிகாரம் கொண்ட குழு ஆய்வு செய்யும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது .


இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத் தேர்வு ( NEET-UG ) முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்பட்டன. பல ஆர்வலர்கள் முறைகேடுகளை மேற்கோள் காட்டி மறுதேர்வைக் கோரியுள்ளனர். பீகாரில் நடந்ததாகக் கூறப்படும் நீட் தேர்வுத்தாள் கசிவு சம்பவம், மறைக்கப்பட்ட கருணை மதிப்பெண்கள், நியாயமற்ற அதிக மதிப்பெண்கள், எதிர்பாராத எண்ணிக்கையிலான முழு மதிப்பெண்கள் மற்றும் மிக அதிக கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆகியவை அடங்கும்.