வெளிநாட்டு மொழிகள் கற்க செவிலியர்களுக்கு அருமையான இலவச பயிற்சிகள் ..

வெளி நாட்டு  வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பாக 11062 திறன் மற்றும் திறனற்ற தொழில்முறை பணியாளர்கள் ஆஸ்திரேலியா, பக்ரைன்,கனடா,குவைத், ஓமன் சுல்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதியரேபியா, லிபியா போன்ற நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


ஏற்கனவே 5500 ற்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் சவதியரேபியாவின் சுகாதார அமைச்சகத்திலும் மற்றும் அதிக அளவிலான வீட்டு பணியாளர்களை குவைத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஜப்பான், ஜெர்மன் மற்றும் UK போன்ற நாடுகளில் பணிபுரிய விரும்பும், செவிலியர்கள் அயல்மொழித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். எனவே அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஜப்பான் மற்றும் ஜெர்மன் மொழிகளுக்கான இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ள செவிலியர்கள், கீழ்கண்ட சமூக வலைதலங்களையோ அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ள செவிலியர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம்மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.