மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டு முடக்கப்பட்டுள்ளதா..? இதோ புதிய வழிமுறை !!

 சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பொருந்தாத முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் தங்களுடைய KYC அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 1, 2014 என வழங்கப்பட்டிருந்தது. பல எண்ணிக்கையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு அக்கவுண்டுகளுக்கு re-KYC என குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு செய்ய தவறும் மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டுகள் முடக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.


அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு பேங்க் ஸ்டேட்மெண்ட் மற்றும் யுட்டிலிட்டி பில்கள் போன்றவை மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டுகளுக்கு செல்லுபடி ஆகும் ஆவணமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது அவை செல்லுபடி ஆகாது.

தங்களுடைய ஆதார் எண்ணை பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர் (PAN) மற்றும் அவர்களது மொபைல் நம்பருடன் இணைத்துள்ளவர்கள் re-KYC செயல் முறையை ஆன்லைனில் நிறைவு செய்யலாம். இந்த இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் வழங்குனரின் பிளாட்ஃபார்ம் மூலமாக உங்களது KYC-ஐ ஆன்லைனில் அப்டேட் செய்யலாம்.

இது முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. உங்களுடைய ஆதார் அட்டை PAN கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் இந்த செயல்முறை மிகவும் எளிமையானதாக மாறுகிறது. re-KYC இல் ஒரு முக்கிய படியாக இருக்கக்கூடிய ஆன்லைன் முகவரி சரிபார்ப்பு செயல்முறையை ஆதார் அனுமதிக்கிறது.


re-KYC செயல்முறையின்பொழுது உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு வெரிஃபிகேஷன் கோடு அனுப்பப்படும். இதுவும் ஒரு முக்கியமான படியாக அமைகிறது.

ஒருவேளை உங்களுடைய PAN கார்டை ஆதார் அட்டையுடன் நீங்கள் இணைக்கவில்லை என்றால் உங்களால் KYC ஐ ஆன்லைனில் அப்டேட் செய்ய இயலாது. ஏனெனில் re-KYC க்கு முக்கியமாக கருதப்படும் முகவரி வெரிஃபிகேஷனை ஆதார் எளிமையாக்குகிறது.

அதுமட்டுமன்றி  உங்களுடைய தற்போதைய KYC தகவலில் ஏதேனும் தவறான தகவல்கள் அல்லது விடுபட்ட தகவல்கள் இருந்தால் அப்போதும் உங்களால் ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது. KRA அலுவலகத்திற்கு சென்று நேரடியாக டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன் உடன் ஆஃப்லைன் முறையில் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

KYC செயல் முறையை மீண்டும் மீண்டும் செய்வதை தவிர்ப்பதற்கு ஒருவர் PAN உடன் இணைக்கப்பட்டுள்ள ஆதாரை பயன்படுத்திக் கொண்டு re-KYC செயல்முறையை ஆன்லைனில் நிறைவு செய்யலாம். அதன் பிறகு தற்போதைய மற்றும் புதிய முதலீட்டு ஃபோலியோக்களில் ஒருவர் தாராளமாக முதலீடு செய்யலாம்.