தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய திட்டம்... வாட்ஸ் ஆப் மூலமாக கரண்ட் பில் ....
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் Tangedco எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகம் கழகம், Tangedco எனப்படும் தமிழ்நாடு தொடரமைப்பு கழகம் ஆகியவை துணை நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. நிலக்கரியை ஆதாரமாக கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் தான் மின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடு
இதுதவிர மரபுசாரா எரிசக்தி மூலமும் மின் உற்பத்திக்கான வேலைகள் நடந்து வருகின்றன. கடும் நிதி நெருக்கடியிலும் தடையற்ற மின்சாரத்தை விநியோகம் செய்ய மின்சார வாரியம் மும்முரம் காட்டி வருகிறது. கடந்த நிதியாண்டில் கூட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 13,811 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இருப்பினும் மின் நுகர்வோர்களுக்கு தேவையான வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த வாட்ஸ்-அப் வசதியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலில் இருக்கிறது.

தமிழக மின் வாரியத்தின் பகிர்ந்தளிப்பு மைய விபரத்தின்படி தமிழகத்தில் 9019 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றை நுாற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன.மே முதல் செப்., வரை காற்றாலை சீசன்.
சீசன் துவங்கியதும் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 8-9 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும். இது ஜூன், ஜூலை மாதங்களில் 10 கோடி யூனிட்களை தாண்டும். அதன்படி 2022 ஜூலை 9ல் 12.02 கோடி யூனிட்கள் கிடைத்தன. இதுவே இதுவரைகாற்றாலை மின்சாரத்தில் கிடைத்த உச்ச அளவு.
கடந்த ஆண்டில் அதிக அளவாக ஜூலை 4ல், 11.71 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. இம்மாதம் காற்றாலை சீசன் துவங்கிய நிலையில் சில தினங்களாக 9 கோடி யூனிட் மேல் கிடைத்தது. நேற்று முன்தினம் 10.27 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. மே மாதத்தில் காற்றாலைகளில், 10 கோடி யூனிட் கிடைப்பது முதல்முறையாகும்.