கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது !!!

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். இதேபோல், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலம் வடகிழக்குப் பருவ மழை காலமாகும். 


தென்மாவட்டங்களில் கோடை வெயில் குறைந்து, தென்மேற்கு பருவமழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாவட்டங்களில் இன்னும் கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை.


இந்த சூழ்நிலையில் இன்று முதல்  கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.


கேரளாவின் தெற்கு பகுதியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது.