எனக்கு 41 வயதில் ADHD உறுதியானது” - நடிகர் ஃபகத் ஃபாசில்!

மலையாள நடிகரான இவரின் படம் இப்போதெல்லாம் வெளியாகிறது என்றால், இவரின் நடிப்பை பார்ப்பதற்காகவே திரையரங்கங்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின்றன. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்கள் அனைத்திலும், தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார் ஃபகத் ஃபாசில்...


நடிகர்களை கொண்டாடாதீர்கள். அவர்களின் நடிப்பை திரையரங்கில் இருந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக விட்டுவிடுங்கள். வீடுகளிலும் நடிகர்கள் பற்றிய பேச்சு வேண்டாம்” என்ற இவரின் வெளிப்படையான கருத்து இணையத்தில் வைரலானது.சமீபத்தில் இவர் நடித்த ஆவேசம் திரைப்படமானது திரையரங்குகளில் வசூலை வாரி குவித்தது. நல்ல நடிகர் என்பது மட்டுமன்றி மிகவும் யதார்த்தமான மனிதரும்கூட. 


பொதுவாக இது பதின்ம வயதிலிருந்து முதிர் வயதுக்கு மாறிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும்.

பெரும்பாலான பதின்பருவ குழந்தைகளின் பெற்றோர்கள், “என் மகன் / மகள் உலகத்தைப்பற்றிய சிந்தனையோ அல்லது தன்னைப்பற்றிய அக்கறையோ இல்லாமல் இருக்கிறான்/ள். எதெற்கெடுத்தாலும் எரிந்து விழுவதை பார்க்க முடிகிறது அல்லது எதிலும் ஒரு ஆர்வம் இல்லாமல் இருக்கிறான்/ள்” என்பார்கள். இப்படி உள்ள குழந்தைகள் பெரும்பாலானோருக்கு ADHD இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. 6 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளில் ஆறில் ஒருவருக்கு ADHD-யின் தாக்கம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.


இந்நோயின் தாக்கத்தை எப்படி தெரிந்துக்கொள்ளலாம்?

குழந்தைகளுக்கு நிலையான பயம், பதற்றம் மற்றும் அதிக இதயத்துடிப்பு, சோர்வு, தூக்கமின்மை மற்றும் தூக்கக் கலக்கம், திடீரென கோபமடைவது ஆகியவை இருக்கலாம். அப்படி இருந்தால், அக்குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதிக்க வேண்டும். உறுதிசெய்யும் பட்சத்தில், உரிய மருத்துவ வழிகாட்டுதலின்படி அவர்களை நம்மால் மேம்படுத்த முடியும். இது நோயல்ல. நரம்பு தொடர்பாக ஏற்படும் ஒருவகை மாற்றம் மட்டுமே. உரிய மருத்துவ வழிகாட்டுதலின்படி, இதை கட்டுப்படுத்த முடியும்.