உடலில் கொழுப்பு கல்லிரல் நோயின் அறிகுறிகள் !!!
உடல் பருமன் என்பது எல்லோராலும் ஏற்று கொள்ள முடியாத தொற்று நோய் போன்றதாகிவிட்டது இதன் காரணமாக பலரும் கொழுப்பு கல்லீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதன் அடுத்தகட்டமான கல்லீரல் சிரோசிஸ் மிகவும் கொடூரமான நோய் என பல மருத்துவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .

அடிவயிற்றில் நீர் கோர்ப்பது மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை முற்றிய நிலை சிரோசிஸ் நோயின் அறிகுறிகளாகும். கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பெரிய பாதிப்புகள் ஏற்படாதுஎனவும் தெரிவிக்கின்றனர் . ஆனால் இந்நோயை வளரவிட்டால் கல்லீரலில் வீக்கமடைந்து, ஆரோக்கிய திசுக்களின் இடங்களில் வடுக்கள் பாதித்த திசுக்கள் வளரத்தொடங்கி கல்லீரலின் செயல்பாட்டின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் பாதிப்புகள் அதிகரிக்கும் போது கல்லீரல் சிரோசிஸ் உண்டாகி கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோயாக வளர்ச்சியடைகிறது.
முக்கிய காரணமாக இருக்கும் உடல் பருமன் குறித்து சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது. நாம் உடல் பருமனாக இருக்கிறோமா இல்லையா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? அதற்குதான் உடல் நிறை குறியீடு (BMI) பயன்படுகிறது. ஒருவரின் BMI 30-க்கு மேல் இருந்தால், அவர் தீவிர உடல் பருமனில் இருக்கிறார் என அர்த்தம். அதுவே 25 முதல் 29 வரையில் இருந்தால் அதிக உடல் எடை என்று அர்த்தம்.

உடல் பருமன் என்பது அதிகப்படியான கொழுப்பு சேர்வது மட்டுமல்ல. இதோடு சேர்த்து டயாபடீஸ், ஹைபர்டென்சன், அதிக கொலஸ்ட்ரால் அளவு, தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளும் வருகிறது. இந்தப் பிரச்சனைகளோடு ஒருவர் இருந்தால், அவருக்கு கொழுப்பு கல்லீரல் வரும் வாய்ப்பு அதிகமுள்ளது.
இவ்வகையான நோயினை இரண்டு வகையாக பார்க்கலாம் ஒன்று, அதிகப்படியான மதுப்பழக்கம் காரணமாக வருவது. இன்னொன்று, ஆரோக்கியமற்ற வாழ்கைமுறை, உடல்பருமன் மற்றும் டயாபடீஸ் போன்ற நாள்பட்ட உடல்நலக்குறைபாடுகள் காரணமாக வருவது. கொழுப்பு கல்லீரல் நோயின் கடைசி கட்டமே சிரோசிஸ். இது உடலின் பல பகுதிகளில் வீக்கத்தை உண்டாக்கும் என்பதால் இதை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

அடிவயிறு : வயிற்றில் நீர்க்கோர்ப்பது தீவிர கல்லீரல் நோயின் அறிகுறியாகும். சில சமயங்களில் கல்லீரலில் ஏற்படும் வீக்கமும் வடுக்களும் ரத்த நரம்புகளில் அதிக அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதன் காரணமாக கல்லீரலின் ரத்த நரம்புகளிலிருந்து வரும் திரவம் அடிவயிற்றில் சேகரமாகி வீக்கத்தையும் வலியையும் உண்டாக்குகிறது.
கால்கள் மற்றும் கணுக்கால் : கல்லீரல் ஒழுங்காக செயல்படாதபோது தான் , நரம்புகளில் அழுத்தம் உண்டாகி பெரிதாகின்றன. இந்த அழுத்தம் கல்லிரலுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து, உடலில் உள்ள அதிகப்படியான உப்பை சிறுநீரகத்தால் அகற்ற முடியாமல் செய்கிறது. ஆகவே கால் நரம்புகள் மற்றும் பாதங்களில் வீக்கம் இருந்தால் கவனிக்காமல் இருக்காதீர்கள்.
பாதம் : சிலருக்கு கணுக்காலில் இருந்த வீக்கம் பாதங்களுக்கும் பரவக்கூடும். கடுமையான வேலை செய்தால் கூட சில நேரங்களில் பாதங்களில் வீக்கம் ஏற்படும் என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எனினும் தொடர்ந்து பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால் ஏதோவொரு பிரச்சனை இருக்கிறது என அர்த்தம்.
விரல்நுனிகள் : விரல்நுனிகள் வழக்கத்தை விட வட்ட வடிவில் அதிகமாக பருத்துப் போயிருந்தால், அது கல்லீரல் சிரோசிஸ் நோயின் அறிகுறியாகும்.
நெஞ்சுப்பகுதி மற்றும் மார்பகம் : தீவிர கல்லீரல் நோயுள்ள ஆண்களுக்கு மார்பு திசுகள் விரிவடைவதன் காரணமாக பெண்களுக்கு இருப்பது போல் மார்பகம் பெரிதாக மாறும். கல்லீரல் பாதிப்பிற்கு தொடர்புடைய ஹார்மோன் ஏற்றத்தாழ்வே இதற்கும் காரணமாகும். இதனால் பாலியல் நாட்டம் குறைந்து மலட்டுத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது.