வாட்ஸ் ஆப் ல் புதிய அப்டேட் delete for me கொடுத்திட்டிங்களா கவலையே வேண்டாம் ...

வளர்ந்து கொண்டிருக்கும் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப இன்றைய உலகின் மக்களும் மாறிக்கொண்டிருக்கின்றனர் . அந்த அளவுக்கு வாட்ஸ்அப் நவீனகால வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.


இந்த சூழலில் பயனர்களின் தேவையை அறிந்து வாட்ஸ்அப் நிறுவனமும் அனுதினமும் அப்டேட்டுகளை அள்ளித் தருகிறது. அதில் புதியதாக ”delete for me” கொடுத்த செய்தியை மீண்டும் ”undo” செய்யும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்யும் போது தவறுதலாக அனுப்பிய செய்திகளை நீக்குவதற்கு ஏற்கனவே delete for everyone வசதி உள்ளது. ஆனால் அவ்வாறு delete for everyone கொடுப்பதற்குப் பதிலாகக் கீழே உள்ள delete for me கொடுத்து விட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது அந்த செய்தி நம்மிடம் இருந்து delete ஆகிவிடும். ஆனால் எதிர்முனையில் இருப்பவர்களுக்கு அந்த மெசேஜ் டெலிட்ஆகாமல் அப்படியே இருக்கும்.


இதனை நம்மால் மறுபடியும் நீக்க முடியாது. இதற்காகவே வாட்ஸ்அப் தவறுதலாக delete for me கொடுத்த மெசேஜை மீட்கும் undo வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட்டில் தவறுதலாக மெசேஜை delete for me கொடுத்தால் அருகில் undo என்ற பாப்அப் தோன்றும். அதை க்ளிக்‌ செய்தால் டெலிட் ஆன மெசேஜ் மீண்டும் வந்துவிடும்.

இந்த பாப் ஆப் ஐந்து வினாடிகள் மட்டுமே திரையில் தோன்றும் அதற்குள் அந்த பாப்அப்பை க்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது .