வங்க கடலில் வலுவடையும் ரிமல் புயலால் பாம்பனில் புயல் எச்சரிக்கை !!!

வங்ககடலில் உருவாகியுள்ள ரீமல் புயல் எதிரொலியால் பாம்பனில் அமைந்துள்ள கடல்சார் துறைமுக அலுவலகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் அமைந்துள்ள கடல்சார் வாரிய துறைமுகம் அலுவலகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது தனுஷ்கோடி பகுதியில் மட்டும் கடல் சீற்றமாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய மற்ற பகுதிகளில் கடல் வழக்கமான நிலையில் காணப்படுகிறது.



மேலும், வங்ககடலில் சூறைக்காற்று வீசி வருவதால்  மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்பாக நிறுத்தவும் மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.