சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு !!
கோடை நேரத்தில் குளு குளு ஆபர் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை ஆகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்ததால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்!!

கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 24) சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53200 ஆக விற்பனை செய்யப்படுகிறது...

நேற்று சவரனுக்கு 880 ரூபாய் குறைந்த நிலையில், இன்று ரூ.800 குறைந்ததால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 சரிந்து ரூ.6,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.96.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500க்கு விற்பனையாகிறது...