திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் அசைவ உணவு சமைக்க தடை

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பராசர முனிவரின் 6 குழந்தைகள் குளத்து நீரை அசுத்தப்படுத்தியதால், மீன்களாக மாறியதாகவும், முருகப்பெருமானின் அருளால் அவர்கள் மீண்டும் முனிவர்களாக சாப விமோசனம் பெற்றதாகவும் பக்தர்களால் கடைப்பிடிக்கும் தினமே விசாக திருவிழா ஆக கொண்டாடப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில், வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி மீன் சமைத்து சாப்பிட கோயில் நிர்வாகம் திடீர் தடை விதித்திருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பராசர முனிவரின் 6 குழந்தைகள் குளத்து நீரை அசுத்தப்படுத்தியதால், மீன்களாக மாறியதாகவும், முருகப்பெருமானின் அருளால் அவர்கள் மீண்டும் முனிவர்களாக சாப விமோசனம் பெற்றதாகவும் பக்தர்களால் கடைப்பிடிக்கும் தினமே விசாக திருவிழா ஆக கொண்டாடப்படுகிறது.

இதனை வசந்த காலத்தின் தொடக்கமாக கருதும் பக்தர்கள், திருசெந்தூர் முருகனை விரதமிருந்து தரிசித்து விட்டு வெளியே வந்து, மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடிப்பது வழக்கமாகும். ஆனால், இந்தாண்டு கோயில் வளாகம் அருகே மீன் சமைத்து சாப்பிடக் கூடாது என்று கோயில் நிர்வாக இணை ஆணையர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதனால், பக்தர்கள் கோயில் வளாகப் பகுதியில் மீன் சமைத்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது