உங்களுக்கு தெரியுமா மாம்பழத்தின் வகைகள் !!
தசேரி மாம்பழம்

உத்திர பிரதேசத்தில் விளையக்கூடிய இது நீளவாக்கில் இருக்கும். இது கொஞ்சம் புளிப்பு சுவையையும் கொண்டிருக்கும். இனிப்பும் , கொஞ்சம் புளிப்பும் கலந்து தனித்துவமான சுவையில் இருப்பதால் இதற்கென்றும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.
செந்தூரன்

இனிப்பு சதைப்பற்றும் நிறைந்த மாம்பழம். சற்று நீள வாக்கில் இருக்கக் கூடிய இதுவும் பலரது நா மொட்டுகளை சிளிர்க்கச் செய்யும்.
பாதாமி மாம்பழம்

அதிக சதைப்பற்று கொண்ட இனிப்பு சுவை மிக்கது இந்த மாம்பழம்தான். இது அதிக அளவில் விற்கக்கூடிய மாம்பழமாகும். அதோடு இதை ஜூஸ் போடாமலே ஜூஸ் போட்டதுபோல் அதன் சதையும் சாறும் கடிக்கும்போதே வழிந்தோடும்.
மல்லிகா மாம்பழம்

தசேரி மாம்பழத்தில் கலப்பினம்தான் மல்லிகா என்று கூறப்படுகிறது.
இதுவும் நீளவாக்கில்தான் இருக்கும்
சுவையும் சற்று தசேரி போன்றுதான் இருக்கும்.
பங்கனப்பள்ளி மாம்பழம்

இதுவும் அதிகமாக சந்தைகளில் கிடைக்கக் கூடிய மாம்பழ வகைகளில் ஒன்று. ஆந்திராவில் அதிக விளைச்சலைக் கொண்ட இதுவும் நல்ல இனிப்பு சுவையை கொண்டிருக்கும்.
அல்போன்சா மாம்பழம்

இந்த மாம்பழத்தை வைத்து கடந்த ஆண்டு ட்விட்டரில் ஒரு போரே நிகழ்ந்தது. அந்த அளவிற்கு இதன் சுவை நாவிலேயே ஒட்டிக்கொள்ளும். மாம்பழ வகைகளிலேயே அல்போன்சாதான் அதிக சுவை மிக்க விலை உயர்ந்த பழம் என்று சொல்லப்படுகிறது. எனவே இதன் சுவையை நீங்களும் தெரிந்துகொள்ள அடுத்த முறை மிஸ் பண்ணாம வாங்குங்க.
ராஸ்புரி மாம்பழம்

ராஸ்புரி மாம்பழம் பார்ப்பதற்கே மிக அற்புதமான நிறத்தில் இருக்கும். சிவப்பு, மஞ்சள் என கண்களை ஈர்க்கும் நிறம். தென்னிந்திய வகைகளில் சிறப்பு மிக்க மாம்பழ வகைகளில் இதுவும் ஒன்று.
கேசர் மாம்பழம் :

இதன் தோல் பார்பதற்கு பச்சைக இருக்கும். ஆனால் உள்ளே பழுத்து நல்ல சதைப்பற்றுடன் இருக்கும். அகமதாபாத்தில் விளையக்கூடிய இதுவும் நல்ல சுவை மிக்கது.