நீண்டகாலப்பயிர்கள் நடும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகளின் அளவீடுகள்..!!

நீண்டகாலப்பயிர்கள் நடும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகளின் அளவீடுகள்..!!


வாழை மரம் 8' × 8'

தென்னை மரம்  24' × 24'

பப்பாளி மரம்  7' × 7'

மாமரம் உயர் ரகம். 30' × 30'

மாமரம் சிறிய ரகம் 15' × 15'

பலா மரம்  22' × 22'

கொய்யா மரம்  14' × 14'

  (அப்பிள் கொய்யா 15'× 15')

மாதுளை மரம்  9' × 9'

சப்போட்டா மரம். 24' × 24'

அன்ன மீனா மரம். 10' × 10'

தோடை மரம். 15' × 15'

எலுமிச்சை மரம்  14' × 14'

திராட்சை.  9' × 6'

நெல்லி மரம்  14' × 14'

முந்திரிகை மரம். 14' × 14'

கறிவேப்பிலை மரம். 7' × 8'

முருங்கை மரம்.  12' × 12'

கராம்பு மரம்.  18'× 18'

கறுவா மரம்.  10' × 10'

கோபி மரம்.  7' ×  7'

கொக்கோ மரம்.  24' × 24'

வேப்பமரம். 15' × 15'

பனைமரம். 10' × 10'

கமுகுமரம்.  7' × 7'

தேக்கு மரம் 10' × 10'

மலைவேம்பு மரம்.  10' × 10'

சந்தன மரம். 15' × 15'

நாவல் மரம்.  30' × 30'

கற்றாழை   1.5'  × 2'

இந்த அளவீடுகள் குறையாது கட்டாயம் இருக்க வேண்டிய 'அடி' அளவுகள் ஆகும்

இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது

இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும்

இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்

மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.

நீண்டு வளர்ந்தாலும் இதன் கேள்வி குறைவாகவே இருக்கும்

இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும்

மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.