இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார்? SRH vs KKR
லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் மொத்தம் 20 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது. புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் ஆக்ரோஷமான பேட்டிங்கை அந்த அணி வெளிப்படுத்தியுள்ளது.

மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா, வருன் சக்ரவர்த்தி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருவதால் இவர்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா இணை எதிரணியை அச்சுறுத்தும் வகையில் விளையாடி வருகிறது. மிடில் ஆர்டரில் கிளாசன் பலம் சேர்க்கிறார்.
இருப்பினும் முதல் 4 விக்கெட்டுகளை ஐதராபாத் பறி கொடுத்தால் சற்று தடுமாறலாம். பவுலிங்கில் நடராஜன், கம்மின்ஸ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். ஒப்பீட்டளவில் கொல்கத்தா வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
அகமதாபாத் மைதானத்தில் சேஸிங் செய்யும் அணிகள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டாஸில் வெல்வது முக்கிய விளைவை ஏற்படுத்தலாம்.