TANGEDCO : திருநெல்வேலியில் பொதுமக்கள் வசதிக்காக க்யூ ஆர் கோட்
திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த வருவோர் சில சமயங்களில் நீண்ட வரிசையில் நின்று கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் நேர விரயம் ஆவதோடு மின் ஊழியர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதையடுத்து மின்வாரியம் பல்வேறு இடங்களில் க்யூ ஆர் கோட் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதிகளைச் செய்து வருகிறது.

பொதுமக்கள் இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து எளிதாக மின்கட்டணத்தைச் செலுத்தலாம். இதில் திருநெல்வேலி மண்டலக் குறியீடு எண் 07- பின்பு தங்களது மின் இணைப்பு எண் இணைத்து (உதரணமாக07 - 000 - 000 - 0000) மின் கட்டணத்தை மிகஎளிதாகச்செலுத்தலாம்.
திருநெல்வேலியில் இந்த க்யூ ஆர் கோடை பொதுமக்களுக்கு உதவி மின் பொறியாளர் கார்த்திக்குமார் அலுவலக வளாகத்தில் காட்சிபடுத்தினார். மேலும், மின் நுகர்வோர்கள் எளிதாக மின் கட்டணம் செலுத்த மேலும் சில வழிகளும் உள்ளன.
இணைய வழி மூலமாக கூகுள் பே ( Google pay), போன் பே (phonepe), பேடிஎம் ( Paytm) போன்ற செயலிகள் மூலம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பணம் செலுத்தும் பயன்பாடு (Tangedco payment app) மூலம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இணையவழி பதிவு மின் நுகர்வோர்கள் (Tangedco online payment portal throug quick payment or login through registered users) மூலம். தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலமாகவும் எளிதாக மின் கட்டணம் செலுத்தலாம்.