சூரியசக்தி மின் கணக்கெடுப்பு மீட்டருக்கு கட்டணம் நிர்ணயம்
வீடு, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, கட்டட உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம். இரவு மற்றும் மழை காலங்களில், சூரியசக்தி மின்சாரம் கிடைக்காது.

இந்த மீட்டரின் விலை அதிகமாக உள்ளதால் அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டத்தில் பலரும் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து வருகின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் ஒரு முனை, மும்முனை இணைப்புகளுக்கான பை டைரக் ஷனல் மீட்டருக்கு, ஒரே மாதிரியாக கட்டணம் நிர்ணயித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஒருமுனை இணைப்பிற்கான பை டைரக்ஷனல் மீட்டர் கட்டணம், மின் இணைப்பு, ஜி.எஸ்.டி., போன்றவற்றை உள்ளடக்கி 2,764 ரூபாயாகவும், மும்முனை இணைப்பிற்கு 5,011 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் தொழில் நிறுவனங்களுக்கான மீட்டர் கட்டணம் 10,720 ரூபாயாக நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.