20 ரூபாய் இருக்கா? வருடம் ரூ.436 மட்டும் கட்டினால் போதும்.. ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும் திட்டம்
பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு, சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.. அதில் ஏராளமான மக்களின் ஆதரவை பெற்றது, மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டமாகும்.. விபத்துக்கான காப்பீடு திட்டம், இந்த பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டமாகும்.

ஏழை எளிய மக்கள் அனைவரும் குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீட்டை பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, கடந்த 2015-ம் ஆண்டு இந்த காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, ஒரு வருடத்திற்குள் தற்செயலான மரணம் மற்றும் இயலாமை பாதுகாப்பு ஆகியவற்றை இந்த திட்டம் வழங்குகிறது.
விபத்துகள் : இந்த திட்டத்தின்மூலம், Accidental Death காப்பீட்டின்படி, ஒரு நபர் விபத்தினால் இறந்தால் 2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.. Total Disability காப்பீட்டின்படி, விபத்து ஏற்பட்டு கை கால்கள் செயலிழந்து இருந்தால் 2 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.. Partial Disablity காப்பீட்டின்படி, விபத்து மூலம் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்து இருந்தால் 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

ஆனால், தற்கொலை செய்து கொண்டால், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தினால் எந்த பயனும் இல்லை.. ஆனால், கொலை காரணமாக இறப்பு ஏற்பட்டால் காப்பீடு கிடைக்குமாம்.. அதேசமயம், ஊனமுற்றோர் இதில் பயன்பெற முடியாது..