வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!
2024 ஆம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.

இந்த நிலையில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. அதில் 91.17% சதவிகிதம் மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி தேர்வு எழுதிய 8,11,172 மாணாக்கர்களில் 4,28,821 மாணவிகளும் 3,84,351 மாணவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இதில் 7,39,539 மாணாக்கர்கள் தேர்சி பெற்றுள்ளனர். அதன்படி, 4,04,143 (94.69%) மாணவியர்களும், 3,35,396 (87.26%) மாணவர்களும் தேர்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் மாணவர்களை விட 7.43% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.79% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.75% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.20% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.36% ஆக குறைந்துள்ளது.
மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.