1000-க்கும் மேற்பட்ட ஆப்ஸ், டியூப் ஸ்பீக்கர்கள்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU... விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் சமீபத்தில் Vu Cinema TV 2024 எடிஷன் என்ற புத்தம் புதிய டிவி மாடலை Vu Televisions நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Vu Cinema TV 2024 எடிஷன் 43-இன்ச் மற்றும் 55-இன்ச் என மொத்தம் இரண்டு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த மாடல் ஸ்பெஷல் 50W டியூப் ஸ்பீக்கர்கள் போன்ற அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது, இவை சிறந்த சவுண்ட் கிளாரிட்டியை வழங்குவதாக கூறப்படுகிறது. எனவே டிவி-யில் வரும் ஒவ்வொரு டயலாக்கும் யூசர்களுக்கு மிக தெளிவாகப் புரியும். இந்த டிவி-க்கள் ஏர்ப்ளே கனெக்டிவிட்டியுடன் வருகின்றன, இது ஐபோன் யூஸர்கள் தங்கள் மொபைல் ஃபோன் கன்டென்டை டிவி-யில் ப்ரொஜக்ட் செய்ய அனுமதிக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Vu Cinema TV 2024 எடிஷனின் ஸ்பெசிஃபிகேஷன்கள், அம்சங்கள் மற்றும் விலை குறித்து விவரங்களை இனி பார்க்காலம்.

இந்தியாவில் வியூ சினிமா டிவி 2024-ன் (VU CINEMA TV 2024) விலை விவரங்கள்:

ஏற்கனவே குறிப்பிடப்படி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்Vu Cinema TV 2024 மொத்தம் இரண்டு சைஸ்களில் வருகிறது. இந்த மாடலின் 45-இன்ச் விலை ரூ.25,999-ஆக இருக்கும், அதே நேரம் இந்த மாடலின் 55-இன்ச் டிவி-யின் விலை ரூ.34,999 ஆகும். VU CINEMA TV 2024-ன் இந்த 2 சைஸ்களும் ஃபிளிப்கார்ட் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரீடெயில் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்:

  • புதிதாக அறிமுகமாகி உள்ள Vu Cinema TV 2024 மாடலானது 400nits-ன் மேம்பட்ட பிரகாசத்துடன் கூடிய 4K IPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது யூஸர்களுக்கு ஒரு அற்புதமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை அளிக்கிறது.

  • இந்த டிவி-யின் ஆடியோ திறன்களைப் பொறுத்தவரை இதில் புதிய 50W டியூப் ஸ்பீக்கர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் ஸ்பீக்கர்கள் டிவி-யின் பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளன, இவை சிறந்த டயலாக் கிளாரிட்டியை வழங்குகின்றன. Dolby Audio அம்சமும் இதில் உள்ளது.

  • Vu Cinema TV 2024 மாடல் WebOS-ல் இயங்குகிறது. கன்டென்ட்ஸ்களை பொறுத்த வரை Netflix, Prime Video, YouTube மற்றும் பிற பிரபலமான பெயர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களுடன் வருகிறது.

    • இந்த டிவி வாய்ஸ் சர்ச் அம்சத்தை சப்போர்ட் செய்கிறது மற்றும் இதனோடு கொடுக்கப்படும் பிரத்யேக ரிமோட் கனட்ரோலில் பிரபலமான ஆப்ஸ்களுக்கான ஷார்ட்கட்ஸ் உள்ளன. ரிமோட்டில் ‘Movies’ என்ற ஹாட்கீயும் உள்ளது. இது பல்வேறு பிளாட்ஃபார்ம்ஸ்களில் உள்ள திரைப்படங்களின் பட்டியலை ஒரே இடத்தில் கொண்டுள்ளது, இது யூசர்களுக்கு மிகவும் உதவிகரமான அம்சமாக இருக்கும்.

    • இந்த டிவி-யில் டூ-வே ப்ளூடூத் ஆப்ஷன்களும் உள்ளன, இது யூஸர்கள் தங்கள் ஸ்மார்ட் ஃபோனின் பிளேலிஸ்ட்டை டிவி-யில் கேட்க அனுமதிக்கிறது. இதில் டூயல்-பேண்ட் வைஃபை வசதிகளும் உள்ளன.