திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?
திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் உள்ள வசதிகள் குறித்து பார்க்கலாம்.
நிகழ்ச்சிகள் :
இருக்கை வசதி 80ல் இருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு ஸ்லாட்டிற்கு 20-30 நிமிடங்கள் வரை கோள்களின் விண்மீன்களை முன்னிறுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இங்கு நடத்தப்படும் முப்பரிமாண காட்சிகள், விண் அரங்க காட்சிகள் ஆகியனவை நமக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

அதில் பால்வெளி அண்டம், சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் பற்றியும் மெய்நிகர் காட்சி காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் உள்ளது. தமிழ் நிகழ்ச்சிகள் காலை 10.30, 1.00 மணி மற்றும் 3.30 மணிக்கும். ஆங்கில நிகழ்ச்சிகள் 11.45 மணி, 2.15 மணி மற்றும் 4.45 மணியிலும் நடைபெறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இங்கு வருகின்றனர். இங்கு பெரியவர்களுக்கு 45 ரூபாய் சிறியவர்களுக்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Contact Number - 0431 233 2190
Website - https://tnstc.gov.in/

