மின்தடை... பழுது பிரச்சனையா? : புகார் அளிக்க உதவி எண்ணை அறிவித்த மின்சார ஆணையம்!

வாடிக்கையாளர்களின் குறைகளை தொடர்ந்து சரி செய்து வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


இந்த கோடை காலத்தில் மின்சார தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த மே 6ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் மட்டும் 4590 மெகாவாட் மின்தேவை இருந்ததாகவும், அதை எந்த தடையுமின்றி சீராக விநியோகித்ததாகவும் மின் பகிர்மான கழகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 65 ஊழியர்கள் 3 ஷிப்டுகளாக வேலை செய்வதாகவும், இதுவரை 24 லட்ச வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் சராசரியாக ஒரு நாளைக்கு 15,000 வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலம் தங்கள் குறைகளை கூறுவதாகவும், அதிகபட்சமாக ஒரே நாளில் 21,000 வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்த்துள்ளதாகவும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏதெனினும் குறைகள் இருப்பின் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.