அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று (13.05.2024) முதல் 17.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.


இன்று (13.05.2024) முதல் 15.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 38°–40° செல்சியஸ், இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36°–38° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°–37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

16.05.2024 மற்றும் 17.05.2024 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பு நிலை - இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36°–38° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°–36° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம் :

இன்று (13.05.2024) முதல் 17.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55% ஆகவும், மற்ற நேரங்களில் 60-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60-85% ஆகவும் இருக்கக்கூடும்.

வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இந்நிலையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.