ராமநாதபுரத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம்...! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேர்வு முகாமானது மே 11-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் இதில் உள்ள விதிமுறைகள், தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்


தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் டிரைவர், உதவியாளர் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாமானது திருவாடானை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

டிரைவர் உதவியாளருக்கான தகுதிகள்:

டிரைவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நாளில் வயது 24-ல் இருந்து 35-க்குள் இருக்க வேண்டும். உயரம்162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகனம் உரிமம் எடுத்து குறைந்தது மூன்று ஆண்டுகள், பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனித வளத்துறை நேர்காணல், கண்பார்வை திறன், மருத்துவ சம்பந்தமான தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு ஆகிய அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். மாத ஊதியமாக 15, 820 வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளர்கள்:

பிளஸ் 2 முடித்த பின் பி.எஸ்.சி.நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி படித்திருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

50 நாட்கள் வகுப்பறை பயிற்சி மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி காலத்தில் தங்கும் வசதிகளும் உள்ளது. இதில் ஊதியமாக ரூ.16,020 வழங்கப்படுகிறது. மேலும் ஏதேனும் விவரங்கள் 044- 28888060 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளவும்.