சென்னை டூ கேரளா நேரடி சிறப்பு ரயில்.. துவங்கியது முன்பதிவு

சென்னை தாம்பரம் – திருவனந்தபுரம் – கொச்சுவேலி இடையே வாரம் இரு தடவை கோடைகால விடுமுறை சிறப்பு ரயில்களை விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக இரு வழிகளிலும் இயக்கவுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.45 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.


மறுமார்க்கமாக வெள்ளி, ஞாயிறு தினங்களில் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு சனி, திங்கள் கிழமைகளில் காலை 4.15க்கு தாம்பரம் ரயில் நிலையத்தை இந்த ரயில் சென்றடையும். இந்த ரயில்கள் வரும் 16ம்தேதி முதல் ஜூன் 29ம்தேதி வரை தாம்பரத்திலிருந்தும், வரும் 17ம்தேதி முதல் ஜூன் 30ம்தேதி வரை திருவனந்தபுரம் கொச்சுவேலியிலிருந்தும் இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது. 14 மூன்றடுக்கு ஏசி எகானமி எல்எச்பி பெட்டிகளோடு இந்த ரயில்கள் இயங்க உள்ளன.

முதன்முறையாக கேரள மாநில தலைநகரோடு நேரடி ரயில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரம்-கொச்சுவேலி (திருவனந்தபுரம்) சிறப்பு ரயில் (06035/06036) வழி: சங்கரன்கோவில்-கொச்சுவேலி சிறப்புவண்டி (06035) தாம்பரம் (வியாழன், சனி) தாம்பரம் புறப்பாடு:  இரவு 09.40சங்கரன்கோவில் வருகை: காலை 07.23am கொச்சுவேலி வருகை: மதியம் 01.40 தாம்பரம் சிறப்புவண்டி(06035)கொச்சுவேலி (வெள்ளி,ஞாயிறு) இயக்கப்படும்.

கொச்சுவேலி புறப்பாடு: மாலை 03.35சங்கரன்கோவில் புறப்பாடு: இரவு 09.05தாம்பரம் வருகை: காலை 07.35 சுருக்க வழித்தடம்: விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, சங்கரன்கோவில், தென்காசி, புனலூர், கொல்லம்முன்பதிவு : (11.05.24) காலை 08.00 மணி முதல் துவங்கும்.