இனி கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கூடாது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!
கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கேரள அரசு தடை வித்தித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு தடை வித்தித்துள்ளது.

ஏன் அரளி தடை செய்யப்பட்டது ?
கேரளாவில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, சூரியா சுரேந்திரன் என்கிற 24 வயது செவிலியர் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்த போது அதற்கு காரணம் அரளி பூ என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

சூரியா உயிரிழப்பதற்கு முன்பு மருத்துவர்களிடம், தான் அரளி பூ மற்றும் அதன் இலைகளை வாயில் போட்டு மென்றதாக கூறியுள்ளார். இந்நிலையில் அவர் உயிரிழந்த பிறகு அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அவர், அரளி பூ விஷத்தால் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவத்தில் அரளி பூ பயன்படுத்தப்பட்டாலும் அது மிகவும் விஷ தன்மை வாய்ந்தது என உலக நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எரிந்த அரளி பூவின் புகையை சுவாசித்தால் கூட அது விஷமாக மாற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.