தமிழகத்தை குளிர்வித்த கோடை மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது.

கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலுக்கு பின் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.
இதேபோல் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, சுந்தரபுரி, பாமணி, தோப்படித் திடல், விட்டுக்கட்டி, சிங்களாந்தி உள்ளிட்ட பகுதிகளில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டித்தீர்த்தது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகத் தொடங்கியிருந்த நிலையில் இம்மழையால் விவசாயிகள் குளிர்ந்தனர்.