தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு? ஷாக் தகவலுக்கு TANGEDCO விளக்கம்

.தமிழ்நாட்டில் தற்போது மின்கட்டணம் உயரப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதில் 200 யூனிட்டுக்கான கட்டணம் 170 ரூபாயிலிருந்து 225 ரூபாயாகவும், 300 யூனிட்டுக்கான கட்டணம் 530 ரூபாயில் இருந்து 675 ரூபாயாகவும் உயரப்போவதாக தகவல் வெளியானது.



அதேபோல 400 யூனிட்டுக்கான கட்டணம் 830 ரூபாயிலிருந்து 1,125 ரூபாயாகவும், 500 யூனிட்டுக்கான கட்டணம் 1,130லிருந்து 1,725 ரூபாயாக உயரப்போவதாகவும் அட்டவணையோடு தகவல் வெளியானது. அந்த அட்டவணையில் 900 யூனிட்டுகள் வரைக்கான கட்டணம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தகவலை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மறுத்துள்ளது. சமூக வலைதளத்தில் உலா வரும் மின் கட்டண செய்திகள் செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதம் எனவும் கூறியுள்ளது. இதனால் மின்கட்டண உயர்வு என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.