அட்சய திருதியில் தங்கம் வாங்க அலைமோதிய பொதுமக்கள்!!!
இந்த ஆண்டில் திருதியை திதியானதுமே 10ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்குத் தொடங்கி நாளை அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது. அட்சய திருதியை நாளில் சுபமுகூர்த்தம் காலை 5.33 முதல் 7.14 வரை இருக்கும். அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரையும் மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் உள்ளன. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாம்.

அதுபோல,விழுப்புரத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு நேற்றைய விட30 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு பவுன்தங்கம் 53,280 ரூபாய் என்ற விலையில் உள்ளது. அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.50 காசு அதிகரித்து 88 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், விழுப்புரத்தில் அட்சய திருதியை முன்னிட்டு பெரும்பாலான நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன.
வாடிக்யைாளர்களும் காலை முதலே நகைக்கடைகளுக்கு சென்று ஆர்வமுடன் நகை வாங்கி வருகின்றனர். அனைத்து நகைக் கடைகளிலும் காலை முதலே வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அட்சய திருதியில் தங்கம் வாங்குவது குறித்து பொது மக்கள் கூறுகையில், இந்த நாளில் எந்த பொருள் வாங்கினாலும் பெருகும் என்று நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் தங்கம் வாங்கினால், பொன் பெருகும் என்ற நம்பிக்கையால் முடிந்த அளவிற்கு இன்றைய தினம் ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்ற நோக்கில் வந்திருக்கிறோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.