விஜய்யின் 50 வது பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரி-ரிலீஸ் ஆகப்போகும் தரமான படம்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் புது படங்களின் வரவை விட பழைய படங்களின் ரி-ரிலீஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நீண்ட லாக்டவ்னுக்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் பழைய படங்களை ரி-ரிலீஸ் செய்தனர், இதனால் மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி வர தொடங்கியது. தற்போது அதே போல் மீண்டும் பழைய படங்கள் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. சம்பத்தில், சில நாட்களுக்கு முன் வெளியான கில்லி  திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் விழா போல கொண்டாடினார்கள்.


கூட்டம் கூட்டமாக தியேட்டர்களை நோக்கி ரசிகர்கள் படையெடுத்தனர். கில்லி படம் வெளியான முதல் நாள் FDFS காட்சி போல, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் வெளியான பிறகும் ரசிகர்கள் fdfs போல கில்லி படத்தை கொண்டாடினார்கள். ரி ரீலிஸ் செய்யப்பட்டு 30 கோடி வசூல் வேட்டை நடத்தியது கில்லி. தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூல் செய்த முதல் ரி-ரிலீஸ் படம் என்ற பெருமையை  கில்லி திரைப்படம் பெற்றது.

ஜூலை 21 ஆம் தேதி விஜயின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, விஜய், நயன்தாரா நடிப்பில் உருவான ‘வில்லு’ திரைப்பம் ரி-ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டதும் விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிட்டனர்.