தமிழக சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் மாநில நலவாழ்வு சங்கத்தின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4724 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. 

செவிலியர் (Staff Nurse)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4724

கல்வித் தகுதி:

செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc Nursing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அல்லது டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://nhm.tn.gov.in/sites/default/files/2026-9/02_Model_Application_Form_Staff_Nurse.pdf என்ற இணையதள பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட நலவாழ்வுச் சங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2026